சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று (மார்ச் 19) தொடங்குகிறது. dont forget these when buy a csk vs mi ticket
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள 18-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
அதனையடுத்துஇரண்டாவது நாளான மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே என்றும், டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்க அனுமதியில்லை எனவும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அம்சமாக இந்த டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் லாக் இன் செய்து முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை விவரம்!
சி/டி/இ லோயர் – ரூ.1,700
ஐ/ஜே/கெ அப்பர் – ரூ.2,500
சி/டி/இ அப்பர் – ரூ.3,500
ஐ/ஜே/கெ லோயர் – ரூ.4,000
கே.எம்.கே டெரஸ் – ரூ.7,500