முன்னாள் மனைவி என்று கூறாதீர்கள்… சாய்ரா பானு உருக்கம்!

Published On:

| By Kumaresan M

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று (மார்ச் 16) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், மும்பையில் இருந்து அவரின் மனைவி சாய்ரா பானு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். Don’t call me his ‘ex-wife- sairabanu

அதில், “புனித மாதத்தில் உங்களுக்கு எல்லாம் சலாம். ஏ.ஆர். ரஹ்மான் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும் அதற்காக ஆஞ்சியோ செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவருக்கு ஒன்றுமாகாது. நான் உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிரியவில்லை.

இப்போதும், நாங்கள் கணவன் மனைவிதான். கடந்த இரு ஆண்டுகளாக நான் சோர்வடைந்திருந்ததால் சற்று விலகியிருக்கிறேன். அவருக்கு என்னால் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால், விலகியுள்ளோம். எனவே, என்னை ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று கூறாதீர்கள். Don’t call me his ‘ex-wife- sairabanu

எனது பிரார்த்தனை எப்போதும் அவருடன் இருக்கும். குடும்பத்தார் யாரும் அவருக்கு ஸ்ட்ரெஸ் தரும் விஷயத்தை செய்யாதீர்கள்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சாய்ரா பானுவும் ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டத்தட்ட 29 வருட திருமணத்திற்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share