வெளியிடங்களில் சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்து வரும்நிலையில், உணவின் மூலம் பரவும் தொற்றுகளின் விகிதமும் தற்போது அதிகரித்து வருகிறது.
முக்கியமாக, வெளியிடங்களில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது உணவின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடம்பில் இருந்து சிறுநீர், மலம் ஆகியவை மூலமாக வெளியேறுகின்றன. அவற்றின் மூலம் கிருமிகள் இன்னொருவரின் உடம்பில் சேர்ந்து விடுகின்றன.
குறிப்பாக, ஹோட்டல்களிலும், உணவுப் பொருள் தயாரிக்கும் இதர இடங்களிலும் வேலை பார்ப்பவர்கள் இந்த நோய் தொற்றுகளைச் சுமந்திருப்பவராக இருந்தால், இந்த வியாதி மற்றவர்களுக்கும் எளிதாகப் பரவிவிடும்” என்கிறார்கள், குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
“எனவே, வெளியிடங்களுக்குச் செல்லும்போது நன்கு கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
பயணங்களின்போது, நன்கு சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமான சுற்றுப்புறத்தில் பாதுகாக்கப்பட்டு, சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டியதும் அவசியம்.
பாலைக் காய்ச்சாமல் அருந்தக்கூடாது. பழச்சாறுகளில் பால் சேர்த்துப் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். துரித உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூடுமானவரையில் நட்சத்திர உணவு விடுதிகள், உணவகங்கள், தெருவோரக் கடைகளில் சாப்பிடுவதாக இருந்தால், சமைத்த மற்றும் சூடான உணவுகளையே சாப்பிடுங்கள். வேகவைக்காத பச்சைக் காய்கறி சாலட்கள், நறுக்கி வைத்த பழங்கள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
ஆரோக்கியமான உணவே, நோயில்லா வாழ்வுக்கு வழிவகுக்கும். அதைக் கவனத்தில்கொண்டு சமைப்பதும் சாப்பிடுவதும் அவசியம். அதிலும் வெளியிடங்களில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்தலைத் தடுக்கும் எண்ணெய்… வீட்டிலேயே தயாரிக்கலாம்!
டாப் 10 நியூஸ் : கமலா ஹாரிஸ் உரை முதல் கமல்ஹாசன் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா மசாலா
விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!
த்ரிஷா இல்லனா நயன்தாரா: அப்டேட் குமாரு
அரசு ஊழியர்கள் மீது ED வழக்கு தொடர முன் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!