பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது, ஹிந்தியில் கலர் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ள பிக் பாஸ் 18வது சீசன் துவக்கத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் தொகுப்பாளராக உள்ள இந்த ஷோ நேற்று (அக்டோபர் 6) தொடங்கியது. 15வது ஆண்டாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் தொகுப்பாளராக இருக்கிறார்.
இதற்காக, வெளியிட்ட புரோமோவில், 18வது சீசனில் போட்டியாளர்களாக பல்வேறு பிரபலங்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறது.
என்ன பிக் பாஸ் வீட்டில் கழுதை இருக்கிறதா? என்று வியக்க வேண்டாம். நடந்தது உண்மைதான்.
பிரபல வக்கீலாக குணரத்னா சதாவார்தே என்பவர் ஹிந்தி பிக் பாஸில் பங்கேற்கிறார். இவர், ஆசை ஆசையாக கழுதை ஒன்றை வளர்த்து வருகிறார். பிக் பாஸ் குழுவினர், அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க அணுகிய போது, கழுதையுடன் இவர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அந்த கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுதித்தால் என்ன? என்கிற கேள்வி பிக்பாஸ் ஏற்பாட்டாளர்களுக்கு எழுந்துள்ளது. வித்தியாசமாக இருக்குமே என்று கருதிய பிக்பாஸ் குழுவினர், கழுதையையும் வீட்டுக்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். கத்ராஜ் என்ற பெயர் கொண்ட அந்த கழுதை அனைத்து போட்டியாளர்களுடனும் பிக் பாஸ் வீட்டில் தங்கப் போகிறது. முன்னதாக, புரோமோவிலும் கத்ராஜ் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுடன் கத்ராஜ் என்ன செய்ய போகிறது? என்று கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் போட்டியாளர்களும் கத்ராஜூக்கு இணையாக ஃபெர்பார்மன்ஸ் காட்ட வேண்டுமென்றும் கேலி செய்து வருகின்றனர். கத்ராஜால் பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த பிரச்னையும் இருக்காது என்று அதன் உரிமையாளர் கூறுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஐந்து பேர் உயிரிழப்பு… தமிழக அரசுக்கு விஜய் வார்னிங்!
குழந்தைகளுக்காக தயாரிப்பாளர்களை நச்சரிக்கும் நயன்தாரா …விசித்திர குற்றச்சாட்டு என்ன?