ஒரே படம் தான்… BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் இயக்குநர்

Published On:

| By Manjula

சிவகார்த்திகேயன் படத்தின் இயக்குநர் ஒருவர் BMW கார் வாங்கி இருக்கிறார். அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தன்னுடைய 23-வது படத்தில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தற்போது விலையுயர்ந்த BMW காரினை வாங்கி உள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2௦22-ம் ஆண்டு சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் டான்.

2கே கிட்ஸ்களின் ஆதரவால் இப்படம் சுமார் 1௦௦ கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. என்றாலும் இப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்திக்கு இன்னும் அடுத்த படம் அமையவில்லை.

ADVERTISEMENT

இந்தநிலையில் சிபி தற்போது விலையுயர்ந்த BMW கார் ஒன்றினை வாங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ”புதிய கார் புதிய சாகசங்கள்” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இதைப்பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

Lok Sabha Election 2024: விஜய் பாணியில் வந்து வாக்களித்த விஷால்

வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share