அதிகரிக்கும் விமான போக்குவரத்து… இத்தனை கோடி பேர் பயணமா?

Published On:

| By Minnambalam Desk

Domestic air Travel traffic rises

இந்தியாவில் விமான போக்குவரத்து பயன்பாடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.45% சதவீதம் அதிகரித்துள்ளது. Domestic air Travel traffic rises

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 43 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இதுவே ஒரு வருடம் முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் 1 கோடியே 32 லட்சமாக இருந்தது. Domestic air Travel traffic rises

ADVERTISEMENT

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் (DGCA) சமீபத்திய தரவுகளின் படி, பல்வேறு விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை பின்வருமாறு, (சதவீதத்தில்)

இண்டிகோ நிறுவனம் 64.1%
ஏர் இந்தியா குழுமம் 27.2%
ஆகாசா ஏர் 5%
ஸ்பைஸ்ஜெட் 2.6%

ADVERTISEMENT
Domestic air Travel traffic rises

2025 ஆம் ஆண்டு ஜனவரி – ஏப்ரல் காலகட்டத்தில் உள்நாட்டு விமான நிறுவனங்களால் பயணிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 75 லட்சமாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் (ஜனவரி – ஏப்ரல்) 5 கோடியே 23 லட்சமாக இருந்தது.

இதன் மூலம் ஆண்டு வளர்ச்சி 9.87 சதவீதமாகவும், மாதாந்திர வளர்ச்சி 8.45 சதவீதமாகவும் உள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்தின் (DGCA) மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விமான பயணங்கள் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக, தனியார் விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமின்றி விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் செயலிகளும் கூடுதலாக சலுகைகளை வழங்குகின்றன. இதனால் குறைந்த செலவில் அதிவிரைவாக செல்வதற்காக பயணிகள் விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

Domestic air Travel traffic rises
Domestic air Travel traffic rises
Domestic air Travel traffic rises
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share