தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் பயந்துகொண்டே தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே வரும் நிலையில் மணப்பாறையில் ஒரே நாளில் 20 பேரும் கடந்த இரண்டு மாதங்களில் 500 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். Dogs bite 20 Manapparai residents
இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 21,95,122 நாய் கடி வழக்குகளும் 37 இறப்புகளும் பதிவாகியுள்ளது. இதில் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்த விவகாரங்கள் மாநில அரசுகளின் வரம்பிற்கு உட்பட்டது. எனவே, இந்த சம்பவங்களை கையாள மாநில அரசுகள்தான் கடமைப்பட்டுள்ளன என்றும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் மக்களவையில் எழுத்துபூர்வமாக சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகிறது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்தும் பலனில்லை என்று அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். Dogs bite 20 Manapparai residents
இப்படி நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத நிலையில்தான் நகராட்சி அலுவலக வளாகப் பகுதியில் கூட 15-க்கும் மேற்பட்ட நாய்கள் குடிகொண்டு நகராட்சிக்கு வரும் மக்களை விரட்டும் சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நேற்று காலை முதல் இரவு வரை மட்டும் மஸ்தான் தெரு மற்றும் காந்திநகர் பகுதிகளை சுற்றித்திரிந்த வெறிநாய்கள் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 500-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் மணப்பாறை பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். ஜனவரி 11ஆம் தேதி நாய்க்கடி பாதிப்புக்கு ஆளான நாகராஜ் என்பவர் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நகராட்சி அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாய்க்கடிக்கு மக்கள் ஆளாகி அவதிப்பட்டு வரும் சூழலில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிப்பதாகவும், எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், நாய்க்கடியில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மணப்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர். Dogs bite 20 Manapparai residents
முன்னதாக, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37,500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு 6,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Dogs bite 20 Manapparai residents