நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி: அரசு மருத்துவமனைகளில் இலவசம்!

Published On:

| By Raj

Dog Bite Rabies vaccination

சமீப காலங்களில் தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அளவில் நடக்கும் விபத்துகளில் 20% மேற்பட்ட விபத்துகள், தெரு நாய்கள் மோதலால் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாய் கடித்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டுக்குச் செல்பவர்கள் வரை தெரு நாய்களின் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இது மட்டுமன்றி நாளுக்கு நாள் நாய் கடியால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. Dog Bite Rabies vaccination

இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், “ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபிஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதாலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. நாய் கடித்தவுடன் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். மேலும் தடுப்பூசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபிஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்து விடலாம். Dog Bite Rabies vaccination

அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, ரேபிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும்.

சிலர் நாய் கடித்த உடன் நாட்டு வைத்தியம் பார்க்கிறார்கள். அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ஒரு நபர் நாய் கடித்து மூன்று மாதங்கள் ஆகியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார். எனவே, நாய் கடியால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், “முன்பெல்லாம் Animal Birth Control என்று சொல்லக்கூடிய திட்டத்தை அரசு நடத்தி வந்தது. அதில் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து ரேபிஸ் ஊசியையும் செலுத்தி சிறிது காலம் பராமரித்து பிடிக்கப்பட்ட இடத்திலேயே அதைப் பத்திரமாக விட்டுவிடுவார்கள். பிடிக்கப்பட்ட பெண் நாய்களின் அண்டம் மற்றும் கருப்பையை அகற்றிவிடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறையும்.

ஆண் நாய்களில் டெஸ்டிகள்ஸை எடுத்துவிடுவார்கள். இதனால் டெஸ்டோஸ்டீரானின் அளவு குறைவதால் அவற்றின் முரட்டுத்தனமும் குறையும். கடிக்கும் செயலும் மட்டுப்படும். தற்போது இந்தத் திட்டத்தை அரசு மீண்டும் முன்னெடுத்து செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் குறையும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். Dog Bite Rabies vaccination

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share