சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 29) காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. காவலர்களுக்கு 102 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். Stalin fulfill police expectation
காவலர்களுக்கான பதவி உயர்வு காலத்தை குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3,363 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேவேளையில், காவலர்கள் பெரிதும் எதிர்பார்த்த பணப்பலன்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் மானியக்கோரிக்கையில் வெளியாகவில்லை என்கிறார்கள்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
“தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் கிடையாது. அதனால் இந்த மானியக்கோரிக்கையில், அவர்களுக்கு காவலர்களுக்கு இணையாக சம்பளம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுதொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல, அனைத்து நிலை காவலர்களுக்கும் இந்த மானியக்கோரிக்கையில் சம்பளம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். அதுதொடர்பான அறிவிப்பு எதையும் ஸ்டாலின் வெளியிடவில்லை. மேலும், வாஷிங் அலவுன்ஸ், ரிஸ்க் அலவுன்ஸ் போன்ற பணப்பலன்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகததால், போலீசார் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்கிறார்கள். Stalin fulfill police expectation
