“பெரும்பாலானோருக்குத் தலையில் பொடுகு அதிகமாக இருக்கும். உச்சந்தலையில் ஏற்படும் இந்தப் பிரச்சினை ‘மலசீசியா’ எனப்படும் பூஞ்சையின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். ஆரம்பத்திலேயே வெள்ளை நிறத்தில் இருக்கும் பொடுகுத் தொல்லையைப் பார்த்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம். அதுவே அதிகமானால் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இதற்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள். Does oiling hair increase dandruff?
“அதிகமாக பொடுகு இருந்தால் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது. பொடுகு தொல்லை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். பொடுகுக்கான ஷாம்பூவைப் பயன்படுத்திவிட்டு உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் அந்த ஷாம்பூ பயனளிக்காது. சீக்கிரமாகவே உச்சந்தலை எண்ணெய் பசை ஆகிவிடும்.
தலைக்கு எண்ணெய் வைக்காவிட்டால், உலர்ந்த தலையைப் போன்று உணர்கிறீர்கள் என்றாலும், தலைவலி போன்ற பிரச்சினை ஏற்படும் என்றாலும், உச்சந்தலையில் எண்ணெயை தேய்க்காமல் முடியில் மட்டும் தேய்த்து வைத்துவிட்டு குளிப்பது நல்லது. முகத்திற்கு தனி டவல், தலைக்கு தனி டவல் பயன்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள். Does oiling hair increase dandruff?