தணிக்கை வாரியத்தின் பார்வைக்கு உட்பட்டு, சான்றிதழ் பெற்று, பிறகு தியேட்டர்களில் வெளியான திரைப்படங்களில் சில, ‘மீண்டும் சென்சார் செய்யப்பட வேண்டும்’ என்ற விவாதத்திற்கு உள்ளாவது சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. does narivetta movie censor again
குறிப்பிட்ட சில ஷாட்கள், வசனங்கள் மற்றும் பாத்திர, கதைச் சித்தரிப்பு தங்களுக்கு எதிராக உள்ளதாகச் சில அமைப்புகள், கட்சிகள் போர்க்கொடு தூக்குவது இதன் பின்னிருக்கிறது. இந்தச் சூழலிலேயே, ‘நரிவேட்டை’ படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுச் சில காட்சிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் சமூகவலைதளங்களில் வைரலானது.
டொவினோ தாமஸ், இயக்குனர் சேரன், சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் நடித்த ‘நரிவேட்டை’ திரைப்படம் கடந்த 23-ஆம் தேதியன்று மலையாளத்திலும் தமிழிலும் வெளியானது. இப்படம் இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ‘அதிக வன்முறை நிறைந்த காட்சிகள் நரிவேட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன’ என்று வெளியான தகவலை இப்படத்தைத் தயாரித்த இந்தியன் சினிமா கம்பெனி மறுத்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘நரிவேட்டை படத்தில் எந்தவொரு காட்சியும் நீக்கப்படவில்லை மற்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
ராப் பாடகர் வேடன் பாடிய ‘வாடா வேடா’ பாடல் மட்டும் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, படம் ரிலீஸ் ஆன அன்று என்னென்ன காட்சிகள் இருந்தனவோ அவை அப்படியே தற்போதும் உள்ளன. அதனால், ஊடகங்களும் சினிமா ரசிகர்களும் இப்படம் குறித்த தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசையும் இந்து மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும்விதமாகப் பாடல்கள் பாடி வருகிறார் என்று வேடன் மீது பாஜகவினர் குற்றம்சாட்டிப் பெரும் விவாதம் எழுந்துள்ள சூழலில், ‘நரிவேட்டை’யில் அவரது பாடல் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. does narivetta movie censor again