மைக்ரோநீட்லிங்’ (Microneedling) என்பது சமீபகாலமாக மிகவும் டிரெண்டாக இருக்கும் சிகிச்சை. டாட்டூ செய்வதைப் போன்ற சிகிச்சைதான் இதுவும். அதிலேயே சற்று மேம்படுத்தப்பட்ட டெக்னிக் என்று சொல்லலாம்.
புருவங்களில் ரோம வளர்ச்சி இல்லாத நிலையில், இயற்கையான புருவங்கள் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதுதான் இந்த டெக்னிக்.
சிலருக்கு தலையில் முடி உதிர்வதைப் போல புருவங்களின் அடர்த்தியும் குறையும். அப்போது பலரும் புருவங்களை அடர்த்தியாகக் காட்ட மைக்ரோநீட்லிங் சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அது எந்த அளவுக்கு நல்லது… பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? சருமநல மருத்துவர்களில் பதில் என்ன?
“இது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது அதைச் செய்கிற நபர், அவரது திறமை, அவர் பயன்படுத்தும் டை மற்றும் ஊசிகள், செய்யப்படுகிற இடம் போன்றவற்றைப் பொறுத்தது.
மெடிக்கல் கிரேடு டை பயன்படுத்தி, அதிகபட்ச சுகாதாரமான சூழலில், மைக்ரோநீட்லிங்கில் அனுபவம் பெற்ற நபர் செய்யும்போது இது முற்றிலும் பாதுகாப்பானதுதான்.
ஒருமுறை மைக்ரோநீட்லிங் செய்துகொண்டால், அது அப்படியே நிரந்தரமாக இருக்கும் என நினைக்க வேண்டாம். புருவங்களில் வரைந்த டையானது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு டச்சப் தேவைப்படும்.
தலைமுடியைப் பராமரிப்பது போன்றதுதான் புருவங்களைப் பராமரிப்பதும். உணவுப்பழக்கம் சரியாக இருக்க வேண்டும். வைட்டமின் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்தும் இரும்புச்சத்தும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கீரை, ஈரல் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
முக்கியமான ஸ்ட்ரெஸ்ஸை தவிர்க்கவும். இதையெல்லாம் தாண்டியும் புருவங்களில் முடி வளர்ச்சி குறைந்தாலோ, புருவங்களே முழுதுமாக உதிர்ந்தாலோ, ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, சரும நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ராபிக்கல் பொங்கல்!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிமுக வட்ட செயலாளர், காவல் ஆய்வாளர் கைது!
ஈரோடு கிழக்குக்கு மட்டும் ரெட்டை பொங்கல் : அப்டேட் குமாரு
மதுரை ஜல்லிக்கட்டு : மல்லுக்கட்ட தயாராகும் காளைகளும், காளையரும் : முழு விவரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : மீண்டும் களமிறங்குமா காங்கிரஸ்?
நடிகர் விஷால் உடல் நலம் பாதிக்க 5 காரணங்கள்… சினிமா வட்டாரங்கள் சொல்வது என்ன?