தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா? எல்லோரும் எடைக்குறைப்புக்கு இதைப் பின்பற்றலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
“தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை, நம் உடலுக்கு தினமும் கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழச்சாறும், தேனும் கலந்து குடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. வைட்டமின் சி சத்தானது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் தொடங்கி சரும ஆரோக்கியம் காப்பது வரை ஏராளமான நன்மைகளைத் தரக்கூடியது. எனவே, அதை எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் உங்கள் காலைப் பொழுதை தண்ணீர் குடித்துத் தொடங்குவது என்பது மிகவும் நல்ல விஷயம். அதிலும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். காலையில் வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடித்து விட்ட காரணத்தால் அன்றைய நாள் முழுவதும் அவர்கள் கொழுப்பைக் கரைத்துக் கொண்டே இருப்பார்கள் என பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் நாள் முழுவதும் கண்ட நொறுக்குத் தீனிகளையும் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
எனவே, வெந்நீர் – எலுமிச்சை சாறு – தேன் கலவை என்பது மேஜிக் பானமெல்லாம் இல்லை. அது உங்கள் தினத்தைப் புத்துணர்வோடு தொடங்க உதவுமே தவிர, எடைக் குறைப்புக்கெல்லாம் உதவாது என்பதைப் புரிந்து கொள்ளவும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!
பியூட்டி டிப்ஸ்: இளமையை மீட்டெடுக்க உதவும் தண்ணீர்!
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவள்ளி சட்னி
ஆம்ஸ்ட்ராங் கொலை: உளவுத்துறை வார்னிங்… ரவுடி முருகேசன் கைது!