பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேஸ்வரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். Edappadi Eps meets Amit Shah
தமிழகம் வரும் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அதிமுக, பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த மார்ச் 28-ஆம் தேதி டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்று டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அமித்ஷா பேட்டி அளித்திருந்தார்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கான காலம் கனிந்துள்ள நிலையில், மோடி தமிழகத்திற்கு வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பில் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்பாயின்மென்ட் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி, ஓபிஸை மோடி சந்திக்கும் போது அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், என்டிஏ தலைவர்கள் பலரும் மோடியை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள். Edappadi Eps meets Amit Shah