கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… பனீர் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

Published On:

| By Selvam

Does eating paneer gain weight?

இன்றைய நாளில் பலரின் விருப்ப உணவாக இருக்கிறது பனீர். இதை தினமும் சாப்பிடலாமா… எவ்வளவு சாப்பிடலாம்… எந்த நேரத்தில், எப்படி எடுத்துக் கொள்வது சிறந்தது… அதனால் உடல் எடை கூடுமா?  ஊட்டச்சத்து ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள்? Does eating paneer gain weight?

அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு புரதச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய பல உணவுகள் உள்ளன. ஆனால், சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த சாய்ஸ் குறைவு. அந்த வகையில் பனீர் அவர்களுக்கான புரதத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆகச் சிறந்த உணவாக இருக்கும்.

தினமும் பனீர் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால், அளவு முக்கியம். 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், தினமும் 30 கிராமுக்கு மேல் பனீர் எடுக்க வேண்டாம். அதற்கு மேல் எடுத்தால் எடை அதிகரிக்கலாம்.

பாலில் இருந்து பெறப்படும் புரதச்சத்து பனீரில் இருக்கிறது. அது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது. எப்போதுமே காலை உணவுக்கு பனீர் எடுத்துக்கொள்வது சிறந்தது. இரவு உணவில் எடுப்பதைத் தவிர்க்கலாம்.

பனீரை கடைகளில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

பாலைத் திரியவைத்து, அந்தத் தண்ணீரைப் பிரித்தெடுத்து விட்டு பனீர் செய்யலாம். எந்தக் கலப்படமும் இல்லாத ஆரோக்கியமான பனீர் கிடைக்கும்.

ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் பனீர் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளாது.

பால் அலர்ஜி, அதாவது லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கும், புரதச்சத்தை செரிக்க இயலாதபடி வயிற்றுப் பிரச்சினை  உள்ளவர்களுக்கும், ஐபிஎஸ் எனப்படும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பாதிப்பு உள்ளவர்களுக்கும் பனீர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எனவே, அவர்கள் மிகக்குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

கிட்னி பிரச்சினை உள்ளவர்களும் மருத்துவரின் பரிந்துரையோடு அவர் குறிப்பிடும் அளவு பனீர் எடுத்துக் கொள்ளலாம். பனீரிலிருந்து கிடைப்பது தரமான புரதம் என்பதால் அது பிரச்சினை ஏற்படுத்தாது.

பனீர் ஏற்றுக்கொள்ளும் என்பவர்கள், அதை டிக்காவாக, கிரேவியாக, சந்தேஷ் எனப்படும் இனிப்பாக…. இப்படிப் பல வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். Does eating paneer gain weight?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்

கிச்சன் கீர்த்தனா: ஃபிரெஷ் கோஸ் சாலட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share