2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். does bsp porkodi joined aiadmk
எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. மேலும், கூட்டணியை பலப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியமான வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
“கடந்த சட்டமன்ற தேர்தலில் 250 முதல் 5,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு சிறு கட்சியினர், அமைப்பினர் ஆதரவும் நமக்கு வேண்டும். அவர்களை அதிமுக என்ற குடைக்குள் நீங்கள் கொண்டு வர வேண்டும்” என்று உத்தரவு போட்டிருக்கிறார். எடப்பாடியின் இந்த உத்தரவை தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் தங்களது வேலையை தொடங்கியுள்ளனர்.

இந்த பின்னணியில் தான் திருவள்ளூர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை சந்தித்து பேசியுள்ளனர்.
சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அங்கிருந்து சரியான தகவல் வராத நிலையில், அதிமுக மாசெக்களுடன் சந்திப்பு நடந்துள்ளது என்கிறார்கள் பொற்கொடி ஆதரவாளர்கள்.
அதிமுக மாசெக்களுடனான இந்த சந்திப்பின்போது, வரும் ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள் வருகிறது. அந்த நாளை பெரிய அளவில் நடத்திவிட்டு, நல்ல பதில் சொல்கிறேன் என்று பொற்கொடி தெரிவித்தாகவும் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். does bsp porkodi joined aiadmk