தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ’என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 27) தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார். பல்லடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பாஜகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பல்லடம் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு:
1. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
2. புதிய நீதிக்கட்சி – ஏ.சி.சண்முகம்
3. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் – ஜான் பாண்டியன்
4. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ்
5. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர்
6. காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்
7. உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து
பாஜகவின் தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் கூட்டமாக இக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் பிரதான வாக்கு சதவீதங்களைக் கொண்ட பெரிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
’அதிமுகவில் இணையும் பாஜக எம்.எல்.ஏக்கள்’ : எடப்பாடி ரியாக்சன்!
சிறைக்கு சென்ற தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்… பின்னணி என்ன?
Comments are closed.