பியூட்டி டிப்ஸ்: அலுவலகத்துக்கு ஏற்ற ஆடை எது தெரியுமா?

Published On:

| By Kavi

Do you know what is the perfect outfit colour for the office? minnambalam beauty tips in Tamil

நாம் உடுத்தும் ஆடையை வைத்துதான் நம் வரலாற்றையே கணிக்கிறார்கள். அதற்குக் காரணம் நாம் உடுத்தியிருக்கும் ஆடைகள் மட்டுமல்ல, அதன் நிறங்களும்தான். இந்த நிலையில் அலுவலகம் செல்லும்போது நீங்கள்  எந்த நிற ஆடையை அணிந்து செல்கிறீர்கள்?

பச்சை:

ADVERTISEMENT

`என்னது… அலுவலகத்துக்குப் பச்சையா?!’ என்ற சந்தேகக் கேள்விக்கான பதில், `ஆம்’. வழக்கத்துக்கு மாறான நிறமாக இருந்தாலும், பச்சை நிறம் மிகவும் `கூலான’ ஒன்று. அதிலும், `ஆலிவ்’ ஷேடு, புதுமையான தோற்றத்தைத் தரும். உளவியல் ரீதியாக பச்சை, இயற்கை, முன்னேற்றம், சுகாதாரம், சாந்தம், பொறாமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. இதன் ஷேடுகளின் வித்தியாசமே உணர்வுகளின் வெளிப்பாடாகும். தனிப்பட்ட, கூலான தோற்றம் பெற `பச்சை’ நிறம் நிச்சயம் உதவும். இனி பச்சை நிறத்தை ஒதுக்கி வைக்காதீர்கள்.

வெள்ளை:

ADVERTISEMENT

தூய்மை, நடுநிலைமை போன்ற உணர்வுகளை வெண்மை வெளிப்படுத்துகிறது. மருத்துவர்கள் போன்ற சமூகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, வெள்ளை நிறம் பரிந்துரைக்கக் காரணம், நடுநிலைமையை வெளிப்படுத்துவதால்தான். அந்தக் காலம், இந்தக் காலம் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் வெள்ளை நிறம் கிளாசிக்தான். ரிஸ்க்கே இல்லாமல் மிடுக்கான தோற்றம் எளிதில் பெறலாம். மேலும், வெண்மை முழு நிறைவுத் தோற்றத்தைத்  தருவதால், இன்டர்வியூக்கு மிகவும் சிறந்தது.

கறுப்பு:

ADVERTISEMENT

அதிகாரம், திறன், வலிமை, அறிவுத்திறன் முதலியவற்றை வெளிப்படுத்தும் நிறம் கறுப்பு. வக்கீல்கள் கறுப்பு கோட் அணிவதன் பின்னணி இதுதான். `கறுப்புனா நெருப்புடா’ என்று பஞ்ச் பேசும் பெரும்பாலானவர்களின் ஃபேவரிட் நிறமும் இதுதான்.

கிரே:

வண்ணங்களில் மதிப்பிற்குரிய நிறம் என்றால் அது `கிரே’தான். உண்மை, நேர்மை போன்ற காலவரம்பற்ற குணாதிசயங்களை இந்த நிறம் கொண்டுள்ளது. எந்தத் தொழிலில் உள்ளவராக இருந்தாலும் சரி, சில நிறங்களால் ஆன உடைகளை உடுத்தியிருக்கும் மனிதர்களைப் பார்த்தாலே மரியாதை வரும். அப்படிப்பட்டவர்கள் அதிகம் அணிந்திருக்கும் நிறம் கிரே. இது அலுவலகத்துக்கு மிகவும் ஏற்ற நிறம்.

நீலம்:

விவசாயம் தவிர்த்து, பெரும்பான்மையான அலுவலகம் செல்பவர்கள் `Blue Collar’ வேலையில்தான் இருப்பார்கள். அதன் பெயர் காரணம் தெரியுமா?

விசுவாசம், உண்மை, கவனம், ஞானம் போன்றவற்றை வெளிப்படுத்துவதுதான் `நீல’ வண்ணம். `ப்ளூ காலர்’ பெயர் அர்த்தமும் இதனால்தான் தோன்றியது. அர்த்தங்கள் எதுவானாலும், உண்மையிலேயே நீல வண்ணம் `ஸ்மார்ட்’ தோற்றத்தை கொடுக்கும் நிறம். நேவி, பேபி எனப் பல ஷேடுகள் உள்ளன. சற்றும் யோசிக்காமல் உங்களுக்குப் பிடித்த ஷேடுகளில் வாங்கி அடுக்குங்கள்.

பிரவுன்:

இது அரிதான நிறம். நம்பிக்கை, திடநிலை, தோழமை, ஆறுதல், பாதுகாப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் நிறமும்கூட. நன்கு முதிர்ச்சிபெற்ற தோற்றத்தைத் தரும்.

தவிர்க்கவேண்டிய நிறங்கள்:

சிவப்பு, பிங்க், ஆரஞ்சு போன்ற பிரைட் நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. இவை கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்விதமாக அமையும். கோபத்தைத் தூண்டும் நிறங்கள் என்பதால், அலுவலகத்துக்கு இவை தேவையில்லை. ஆனால், `கேஷுவல்’ வகைகளில் பயன்படுத்தலாம். உடுத்தும் ஆடைக்கேற்ற வாட்ச், செயின் முதலியவற்றை அணிவதும் மிக முக்கியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

‘வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்வேன்”: கதறி அழுத சிறுவனின் அத்தை!

தவெக-வுடன் கூட்டணியா? – விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share