தமிழகத்தில் பாஜகவின் பூத் முகவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

Published On:

| By Mathi

BJP BLA

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழகத்தில் பாஜகவின் பூத் முகவர்கள் (வாக்குச் சாவடி முகவர்கள்- BLA) எண்ணிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் அடுத்த கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம் பெற்றிருந்த புள்ளி விவரங்கள்தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பின் அடிப்படையில் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் விவரம்:

ADVERTISEMENT

திமுக– 65,213
அதிமுக– 63,903
பாஜக– 54,868
தேமுதிக– 32,857
காங்கிரஸ் – 28,157
சிபிஎம்– 2,912
நாம் தமிழர் கட்சி– 1,788
சிபிஐ– 1,179
விசிக– 168

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக பாஜகவின் பூத் முகவர்கள் எண்ணிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியை விட 2 மடங்கு எண்ணிக்கையில் பாஜகவின் பூத் முகவர்கள் எண்ணிக்கை உள்ளது.

ADVERTISEMENT

பூத் முகவர்கள் எண்ணிக்கையில் தேமுதிகவின் 4-வது இடமும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. 234 தொகுதிகளிலும் இடைவிடாமல் வேட்பாளர்களை நிறுத்தக் கூடிய நாம் தமிழர் கட்சிக்கு பூத் முகவர்கள் வெறும் 1,788 பேர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share