ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு கொண்டவரா நீங்கள்?

Published On:

| By christopher

தினமும் காலை எழுந்ததும் மலம் கழிப்பது என்பது அன்றாட கழிவு நீக்க செயல்பாடுகளுள் அடிப்படையானது. நோயின்றி வாழ்வதற்கான ஆரோக்கியத்தின் குறியீடு அது.

இயல்பாக மலம் வெளியேறும்போது மனம் முதல் உடல் வரை எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால், அதுவே மலம் கழிப்பதில் பிரச்னை எனில், மனச்சிக்கலில் தொடங்கி உடல் சார்ந்த பல பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்தும். இதில் மலச்சிக்கலைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது, மலத்தை அடக்க முடியாமை.

மலம் அடங்காமையை ‘குடல் அடங்காமை’ என்றும் சொல்லலாம். செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினையால் சிலருக்கு குடல் தசைகள் தளர்ந்து போய்விடும்.

அப்படிப்பட்டவர்களுக்கும், குடல் இறக்கம் கொண்டவர்களுக்கும், குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உடல் பருமன் உடையவர்களுக்கும், வயோதிகமும் சிலருக்கு மலம் அடங்காமைக்குக் காரணங்களாக இருக்கின்றன.

பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் கட்டிகள் இருந்தாலும் ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகளில் ஏற்படும் காயங்கள், முதுகுத்தண்டு காயங்கள் போன்றவற்றாலும் மலம் அடங்காமை ஏற்படலாம்.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் உணவுகளின் மூலம் உண்டாகும் வைரஸ் தொற்று காரணமாகவும் கட்டுப்பாடில்லாத, நேரம் தவறிய உணவுமுறை காரணமாகவும் இளைஞர்களும் மலத்தை அடக்க முடியாமை பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை வெளியே சொல்லவே தயங்குகிறார்கள். ஏதோ வயிற்றுப்போக்கு என்று மாத்திரை, மருந்துகளை அவர்களாகவே எடுத்துக்கொள்வார்கள்.

இந்த நிலையில், “தன்னிச்சையாக நிகழும் மலம் அடங்காமை ஒரு வாரம் தொடர்ந்தால் அதற்கேற்ற சிகிச்சை அவசியம். முக்கியமாக, மலம் கழித்தலை அருவருப்பான விஷயமாக நினைக்காமல்… மலம் கழித்தலின்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் முதல் கேம் சேஞ்சர், வணங்கான் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ரெட் வெல்வெட் பொங்கல்

திருப்பதி கூட்டநெரிசல்… சந்திரபாபு நாயுடு கொடுத்த உறுதி!

தண்டர் போல்ட்’ கிக் ‘அடிப்பவருக்கு மனைவி ‘கிக்’ கொடுத்தாரா? ரபார்ட்டோ கார்லஸ் சொத்துக்களை இழக்கிறாரா?

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற டோனர் எது?

ஹெல்த் டிப்ஸ்: வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம் நில்லுங்கள்!

இந்த மாச 1000 ரூபாய்… இன்னைக்கே மெசேஜ் வந்துருக்கா பாருங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share