கோடையில் தாகம் தணிக்க அவ்வப்போது மென்பானம் (Soft drings) எனப்படும் கடைகளில் விற்கப்படும் குளிர்பானம் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால், இதன் விளைவுகள் குறித்து சில அலர்ட் குறிப்புகளைப் பகிர்கிறார்கள், பொதுநல மருத்துவர்கள்.
“குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்’ எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. குறிப்பாக, தாகம் தணிவதும் இல்லை.
மேலும், குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் சேர்க்கிறார்கள்.. இனிப்பை நிலைப்படுத்த சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்குகிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல் பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள்.
இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தரக்கூடும். Do soft drinks quench thirst?
அத்துடன் கோடையில் ஏற்படும் தாகத்தை உடனடியாகத் தவிர்க்க குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிக குளிர்ச்சியான நிலையிலேயே குடிக்கிறோம். இதனால், உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இது முற்றிலும் தவறு. Do soft drinks quench thirst?
உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அதன் குளிர்ச்சியானது நமது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதன் விளைவால் தாகம் கூடுமே தவிர குறையாது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த பானங்களைக் குடிக்கத் தூண்டும்.
தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60% பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. Do soft drinks quench thirst?
இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடல் பருமனை உண்டாக்குகிறது. இந்த உடல் பருமன் இளம் பருவத்திலேயே இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது.
குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து இரைப்பைப் புண், குடற்புண் போன்றவை ஏற்படலாம். பசியின்மை, புளித்த ஏப்பம், எதிர்க்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்தும் உண்டு” என்று எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில், “கோடைக் காலத்தில் தினமும் மூன்றில் இருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர் போன்றவை தாகம் தணிக்க உதவும். எலுமிச்சைச் சாற்றுடன் சமையல் உப்பு, சர்க்கரை கலந்து அருந்துவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
