மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Published On:

| By christopher

Do not start shooting until further notice: tamil film producers council

புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி இன்று (அக்டோபர் 29) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், ”தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும்.

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

ADVERTISEMENT

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

Image

ADVERTISEMENT

இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்.

நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புதுச்சேரியில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கேபினெட் மீட்டிங்கை பதுங்கி பதுங்கி நடத்திய இஸ்ரேல்… ஈரான் மீது இவ்வளவு அச்சமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share