திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!

Published On:

| By Monisha

DMK youth wing conference held on december 17 on salem

திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதியை திமுக தலைமை கழகம் இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து,

வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மோனிஷா

ரயில் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share