மின்சார மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On:

| By Minnambalam

மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவைத் திரும்ப பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசியபோது, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி கோவை வருகிறார். அவர், 24ஆம் தேதி கிணத்துக்கடவில் நடை பெறும் விழாவில் 82,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதையடுத்து, பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் 234 தொகுதியிலும் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். கோவை -அவினாசி ரோட்டில் புதிதாக கட்சி அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற இளைஞர் அணியினரின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற நிலையை அடைய வேண்டும்” என்று அவர் பேசினார்.

ADVERTISEMENT

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  “மத்திய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா இலவச மின்சாரம் பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த மசோதாவைத் திரும்ப பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்” என்றார்.

-ராஜ்

இந்தியா முழுதும் பாஜக இனி தனித்துவிடப்படும்:தேஜஸ்வி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share