2026 தேர்தல்: திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி! -விஜய் பேச்சு!

Published On:

| By Aara

வருகிற 2026  சட்டமன்றத் தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று இன்று (மார்ச் 28) நடந்த பொதுக்குழு கூட்டத்தில்  தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

பொதுக்குழுவில் பேசிய விஜய், DMK Vs TVK 2026 vijay speech

“நாம்தான் 2026 தேர்தலில் ஆட்சியை அமைக்கப் போகிறோம். நமது ஆட்சியில்  பெண்கள் பாதுகாப்பை 100 சதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை ஸ்ட்ரிக்டா வைச்சிருப்போம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்களுக்கு துணையாக இருப்போம். ஏனென்றால் நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான்.

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம்.

2026 இல் மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவர உறுதியாக இருக்கிறோம். அதைத் தடுக்க சில பேர் பகல் கனவு காண்கிறார்கள். காற்று, மழை, வெயில் போல எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சூறாவளி, தேர்தல் சுனாமியை யாராலும் தடுக்க முடியாது.DMK Vs TVK 2026 vijay speech

பார்த்துக்கிட்டே இருங்க… இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை தமிழ்நாடு அடுத்த வருடம் சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே.   ஒன்று டி.வி.கே.  இன்னொன்று டி.எம்.கே. நம்பிக்கையா இருங்க வெற்றி நிச்சயம்”  என்று முடித்தார் விஜய்.  

தேர்தல் களத்தில் அதிமுகவே இல்லை என்று விஜய் சொல்லாமல் சொல்லியிருப்பது குறிப்பிடத் தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share