தருமபுரி திருப்பம்… 20000 வாக்குவித்தியாசம்… உறுதியாகும் திமுக வெற்றி!

Published On:

| By Kavi

தருமபுரி தொகுதியில் இன்று காலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் மணிக்கும், சவுமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில்  பிற்பகல்  முதல் திமுக வேட்பாளர் மணி முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போது, தருமபுரியில் சுமார் 20000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி முன்னிலையில் உள்ளார். சவுமியா அன்புமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தருமபுரியில் திமுகவுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விளவங்கோட்டை தக்கவைத்து கொள்ளும் காங்கிரஸ்!

வேட்டையன் ரிலீஸ் தேதி இதுதான்.. ரஜினியே சொல்லிட்டார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share