திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை!

Published On:

| By Kavi

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 14) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரேவதி, “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளில், கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும் அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு ஒரு மாதம் கால அவகாசமும் வழங்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share