கோவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சிக்கும் வகையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகள் மீதான கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே கோவையில் உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சிக்கும் வகையில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்” என எழுதப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, செந்தில் பாலாஜி மற்றும் கோவை திமுக நிர்வாகிகள் படங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக முதல்வர் நேற்று தனது எக்ஸ் பதிவில், எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து கோவையிலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
