நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளை சந்திக்கும் திமுக ஒருங்கிணைப்பு குழு!

Published On:

| By Selvam

Dmk parliament election coordination committee meeting

Dmk parliament election coordination committee meeting

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்தவகையில் ஆளும் கட்சியான திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த என மூன்று குழுக்களை அமைத்துள்ளது.

அதேபோல எதிர்க்கட்சியான அதிமுகவும் நேற்று தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் விளம்பர குழுக்களை அமைத்தது.

சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த கையோடு, திமுக  நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அந்தவகையில், முதற்கட்டமாக ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை 40 நாடாளுமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.

ஜனவரி 24 – கிருஷ்ணகிரி, திருவள்ளூர்

ஜனவரி 27 –  பொள்ளாச்சி, கோவை

ஜனவரி 27  -நீலகிரி, திருப்பூர்

ஜனவரி 28  – நாமக்கல், ஈரோடு

ஜனவரி 28  – சேலம், தர்மபுரி

ஜனவரி 29  – சிவகங்கை, விருதுநகர்

ஜனவரி 29  – தென்காசி, திருநெல்வேலி

ஜனவரி 30  – தூத்துக்குடி, கன்னியாகுமரி

ஜனவரி 30  – மதுரை, தேனி

ஜனவரி 31  – ராமநாதபுரம், கடலூர்

பிப்ரவரி 1 – சிதம்பரம், மயிலாடுதுறை

பிப்ரவரி 1 – நாகப்பட்டினம், தஞ்சாவூர்

பிப்ரவரி  2- வேலூர், அரக்கோணம்

பிப்ரவரி 2 – விழுப்புரம், கள்ளக்குறிச்சி

பிப்ரவரி 3 –  வடசென்னை, தென் சென்னை

பிப்ரவரி  3 –  மத்திய சென்னை, திருபெரும்புதூர்

பிப்ரவரி 4 –   திருவண்ணாமலை, ஆரணி

பிப்ரவரி  4-   பெரம்பலூர், திருச்சி

பிப்ரவரி 5 –   கரூர், திண்டுக்கல்

பிப்ரவரி 5   – காஞ்சிபுரம், புதுச்சேரி

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிர்வாகிகள் சந்திப்பை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ள உள்ளது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

புள்ளியல் பணியிடங்களில் அலட்சியம் காட்டும் டிஎன்பிஎஸ்சி: ராமதாஸ்

Dmk parliament election coordination committee meeting

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share