பணம், பதவி ஆசை காட்டிய திமுக: தேமுதிக சூலூர் தினகரன்

Published On:

| By Balaji

சந்திரகுமார் தலைமையிலான தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து திமுக-வில் இணைந்துவரும் நிலையில், சூலூர் தொகுதி தேமுதிக எம்எல்ஏ தினகரன் கோவையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முதலில் மதிமுக-வை பலவீனப்படுத்த முயன்ற திமுக, அந்த முயற்சி பலனளிக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தது.

இப்போது, தேமுதிக-வை பலவீனப்படுத்த பல்வேறு தந்திரங்களை திமுக கையாளுகிறது. ஆனால், திமுக-வின் இந்த முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. திமுக-வில் சேர்ந்தால் பணம், பதவி அளிப்பதாகக்கூறி என்னையும் திமுக-வினர் அழைத்தனர். இன்று மாலை (மார்ச்-5) செல்போனில் அழைத்துப் பேசினர். ஆனால், நான் விஜயகாந்த்மீது கொண்ட நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தவன். எப்போதும் தேமுதிக மட்டுமே எனது கட்சி’ என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share