தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்… எம்.பி.க்களுக்கு திமுக தலைமை உத்தரவு!

Published On:

| By christopher

Anna-Arivalayam

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (மார்ச் 9) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. dmk mps called for meeting ahead of parliamentary session

கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வரும் மார்ச் 10ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அப்போது பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share