விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கவலைக்கிடமாக இருப்பதாக விழுப்புரம் திமுக வட்டாரத்தில் வருத்தத்தோடு சொல்கிறார்கள்.
நேற்று (ஏப்ரல் 5) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல்வர் வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைக்கு அருகே இருக்கும் ஓய்வு அறையில் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் விஷ்ணுபிரசாத், புகழேந்தி எம்எல்ஏ உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். இந்தநிலையில், திடீரென புகழேந்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
அவரை பொன்முடி உடனடியாக கவனித்து மருத்துவ சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புகழேந்தி எம்எல்ஏ கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான திமுக வட்டாரத்தினர் கூறுகிறார்கள். இந்தநிலையில், சென்னையில் இருந்து மருத்துவக்குழு முண்டியம்பாக்கம் விரைந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்