அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) வெளியான நிலையில், அதை தியேட்டரில் கேக் வெட்டி ரசிகர்களுடன் திமுக அமைச்சர் கீதாஜீவன் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. dmk minister geethajeevan visit ajith good bad ugly fdfs
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது.
தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் படத்திற்கு பெரும் வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். காலை முதல் திரையரங்குகளில் கூட்டம் காணப்பட்ட நிலையில், மேள தாளம் முழங்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் காட்சியைக் காண சமுகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அவருக்கு அங்கிருந்த அஜித் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கீதாஜீவன் பின்னர் திரைப்படத்தையும் கண்டுகளித்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.