”செம்மொழிக்கு சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலர்” – கலைஞர் பிறந்தநாளில் குவியும் புகழாரம்!

Published On:

| By christopher

dmk leaders poured wishes kalaingar 102 birthday

கலைஞரின் 102ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) செம்மொழி நாளாக திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். dmk leaders poured wishes kalaingar 102 birthday

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்தில் மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் முதல் தீர்மானமாக கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் என நிறைவேற்றப்பட்டது.

அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று இன்று காலை மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன்பின்னர் கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் பங்கேற்றார். அப்போது தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

ADVERTISEMENT

இதற்கிடையே கலைஞரின் 102ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!

ADVERTISEMENT

முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!

ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோடானு கோடி கருப்பு – சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாள் இன்று.

கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் வகுத்தச் சட்டங்களும், தீட்டிய திட்டங்களும் , உருவாக்கிய கட்டமைப்புகளும் தான் இன்றைய தமிழ்நாட்டின் அடையாளம்.

தமிழ்நாட்டில் கலைஞரின் சாதனைச் சுவடுகள் பதிந்த இடங்களில் எல்லாம் 102 நிகழ்ச்சிகளை கழகம் இன்று நடத்துகிறது.

இன எதிரிகளை தமிழ்நாட்டுக்கு வெளியே நிறுத்த – துரோகிகளை வீழ்த்த, கலைஞர் கற்றுத் தந்த ‘அரசியல் வியூகம்’ தான் பாசிசத்தையும் – அடிமைகளையும் பதற வைக்கிறது.

மண்-மொழி-மானம் காத்திட மதுரை பொதுக்குழுவில் நம் கழகத்தலைவர் அறிவித்த, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கையை திறம்பட நிறைவேற்றுவதே கலைஞருக்கு உடன்பிறப்புகள் நாம் அளிக்கும் உன்னதமான பிறந்த நாள் பரிசு.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல உறுதியேற்போம்!

கலைஞரின் கரம்பற்றி பேரலையாய் எழுவோம் – தமிழ்நாடு காப்போம்!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக எம்.பி கனிமொழி

அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!

அமைச்சர் எஸ்.ரகுபதி

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற மாபெரும் அரசியல் ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழின் பெருமை.. தமிழ் நாட்டின் பெருமை.. தமிழ் இனத்தின் பெருமை.. வாழ்க வாழ்க வாழ்கவே, தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே.. கலைஞர்102 🖤♥️

திமுக எம்.பி தயாநிதி மாறன்

தாய்மொழித் தமிழுக்கு
செம்மொழித் தகுதியைப்
பெற்றுத்தந்த
முத்தமிழறிஞரே…
உங்கள் பிறந்தநாளை
செம்மொழி நாளாகக்
கொண்டாடி மகிழ்கிறது
செந்தமிழ்நாடு!

திமுக எம்.பி., எம்.எம். அப்துல்லா

என் பெயருக்கு பின்னாலே
பெருமையாய் பட்டம்..

அதை நான் பெற்றிடவே
நீ தந்தாய்
இட ஒதுக்கீடு சட்டம்.

ஊர் என்ன சொன்னாலும்
கவலையில்லை..

உன் புகழ் பாடித் திரிவதே
என் முழு நேர வேலை!

வாழிய வாழிய வாழியவே
தலைவர் கலைஞர்
புகழ் வாழியவே!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share