திமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 19) மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில் சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் தொடங்கியதும், மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட நேரம் மவுனமாக எழுந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆளுநர் ரவி மற்றும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், “முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட வெள்ள நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டி வருவதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் பிரச்சாரம் செய்து வருவதை மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி, அரசியல் ஆதாயம் தேட முனைவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை டிடி தமிழ் சேனலின் சார்பில் நடைபெற்ற இந்தி வார நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் பாடப் பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் தவிர்க்கப்பட்டு அவமரியாதை செய்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பொதிகை என்று அழகான தமிழ் பெயரில் இருந்த தமிழ் சேனலை தூர்தர்ஷன் தமிழ் என்று பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்கவாசல்’ ; கதை இது தானா..?
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs நவ்யா… வேட்பாளரை அறிவித்த பாஜக