வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று (மார்ச் 29) பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை வாணியம்பாடி பகுதியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து ஆலங்காயம் நாயக்கனூர், புதூர், பூங்குளம் பகுதிகளிலும் கதிர் ஆனந்த் பிரச்சார வாகனத்தில் சென்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “எப்போதும் சிறுபான்மையினருக்கான கட்சி திமுக மட்டும் தான். நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. ஆனால் திமுக எதிராக வாக்களித்தது. மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் நான் ஒருவர் என கதிர் ஆனந்த் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கணேசமூர்த்தியின் கடைசி நாட்கள்… முதல்வருக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!
தேர்தல் பிரச்சாரம் : காங்கிரஸ் தொகுதிக்கு செல்ல கமல் மறுப்பு?