அண்ணாமலையை செட் செய்த திமுக : ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Kavi

DMK has set Annamalai

அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். DMK has set Annamalai

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) நடைபெற்று வருகிறது.  

இதில் பேசிய தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். 

அண்மையில், நடிகைகளின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார் என்று அண்ணாமலை கூறியிருந்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய ஆதவ் அர்ஜுனா,  எதிர்க்கட்சிகளை எப்படி உடைக்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவர்களை எப்படி விலைக்கு வாங்குவது, தவெகவுக்கு எதிராக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது.

அதற்காக  அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது. டெல்லியில் இருந்து  கொண்டு மோடி மற்ற மாநிலங்களை செட் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இங்கு இவர்கள் அண்ணாமலையை வைத்து செட் செய்துகொண்டிருக்கிறார்கள். 

அதாவது புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. பெண்ணை கேவலமாக  பேசக்கூடிய தலைவரை வைத்திருந்தால் அந்த கட்சி எந்தளவுக்கு இருக்கும் என்பது முடிவாகிவிட்டது.

தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு இந்த தலைவரை பற்றி தெரியும். அண்ணா பல்கலை விவகாரத்தில் நாமெல்லாம் யார் அந்த சார்? எங்கே அந்த சார் என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது இவர் சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார்.  யாருக்காக இந்த அரசியல் செய்கிறார்.

எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் வெளிகாட்டுவோம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்” என்றார். 

அதிகாரத்தை வைத்து சம்பாதிக்கிற எந்தவொரு செயலும் ஊழல்தான் என்று குறிப்பிட்ட  ஆதவ் அர்ஜுனா,  “தவெகவில் எங்கே சாதி இருக்கிறது. 70 வருஷமாக சாதியை உருவாக்கிவிட்டு திமுக தேர்தல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. இது யாருக்கு தெரியுதோ, இல்லையோ. எனக்கு தெரியும். அங்கிருந்துான் வேலை பார்த்துவிட்டு வந்தேன்.

எம்ஜிஆரும் 20 ஆண்டுக்கு மேலாக அங்கே வேலை பார்த்தார். உண்மை தெரிந்துவிட்டது வெளியே வந்துவிட்டார். திமுகவில் இருக்கும்போது அண்ணாவின் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. ஜெயித்த பிறகு அண்ணாவின் குறிக்கோளை நிறைவேற்றினார். இன்று பெரியார், அண்ணாவின் குறிக்கோளை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர்.

காவல்துறையை யார் கன்ட்ரோல்செய்துகொண்டு இருக்கிறார். நம்முடைய அப்பா, ஹோம் மினிஸ்டர் சரியில்லை” என்றார். 

மேலும் அவர்,  “திமுகவும் பாஜகவும் எதிரிகள் போன்று நாடகமாடுகிறார்கள். முசோலினியும் ஹிட்லரும் சேர்ந்துகொண்டு அரசியலை உருவாக்கி வருகிறார்கள்” என்று கூறினார். DMK has set Annamalai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share