திமுக காங்கிரஸுக்கு கெடு விதிக்கவில்லை : செல்வப்பெருந்தகை

Published On:

| By Kavi

முதல்வருடன் ப.சிதம்பரம் சந்தித்த நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இன்று (மார்ச் 3) காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் சித்தரஞ்சன்சாலை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

ADVERTISEMENT

சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இதன்பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம், ஸ்டாலின் – ப.சிதம்பரம் இருவரும் என்ன பேசினர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர், “நல்லப்படியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்தது. கூட்டணி விவகாரத்தில் திமுக எதுவும் கெடு விதிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இழுபறி எதுவும் இல்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்று பதிலளித்தார்.

முன்னதாக ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போகிறார் என முதன்முதலில் நமது மின்னம்பலத்தில் : ராகுல் திடீர் முடிவு.. ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்.. முடிவுக்கு வரும் சலசலப்பு? என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் விரிவாக சொல்லியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share