திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

Published On:

| By christopher

Two drastic changes in DMK

வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (டிசம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நமது கட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், வரும் 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share