திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?

Published On:

| By Monisha

DMK booth incharge meeting

வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி  கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் திருச்சி, ராமநாதபுரத்தை தொடர்ந்து கோவை மண்டல பயிற்சி பாசறை கூட்டத்தை திமுக கூட்டவுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்” நடத்திட முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார்.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 14 மாவட்டங்களின் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தை’ கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

1.திருப்பூர் வடக்கு
2. திருப்பூர் தெற்கு
3. சேலம் கிழக்கு
4. சேலம் மேற்கு
5. சேலம் மத்திய
6. ஈரோடு வடக்கு
7. கரூர்
8. ஈரோடு தெற்கு
9. கோவை மாநகர்
10. கோவை வடக்கு
11. கோவை தெற்கு
12. நாமக்கல் கிழக்கு
13. நாமக்கல் மேற்கு
14. நீலகிரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!

சனாதனம் எல்லா மதத்திற்கும் பொதுவானது: டிடிவி புது விளக்கம்!

Photo of author
Monisha

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share