திமுக மா.செ.க்கள் கூட்டம்- சட்டமன்ற தேர்தல் குறித்து இன்று ஸ்டாலின் ஆலோசனை

Published On:

| By Mathi

DMK MKS

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 9) காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் உறுப்பினர் சேர்க்கை, திமுக அரசின் நலத் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை திமுக நடத்தி வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுகவின் கரூர் முப்பெரும் விழா ஏற்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share