மார்ச் 3-க்கு பிறகு தொகுதி பங்கீடு கையெழுத்து: இந்திய கம்யூனிஸ்ட் நம்பிக்கை!

Published On:

| By Selvam

Dmk CPI seat sharing second talk

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று (பிப்ரவரி 26) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயன், “40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை தமிழகத்தின் கிராமப்புற, நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை ஒதுக்க கேட்டிருக்கிறோம். அதனடிப்படையில் இரண்டாவது கட்ட தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தையானது சுமூகமாக நடைபெற்றது. மார்ச் 3-ஆம் தேதிக்கு பிறகு தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

Video: ”ஹீரோவாக வேண்டாம்” : சர்பராஸ் கானை அதட்டிய ரோஹித்… நடந்தது என்ன?

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share