நெல்லை மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது.
புதிய மேயரை தேர்வு செய்வதற்காக திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 4) கலந்து கொண்ட கூட்டத்தில் மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலின் போது திமுக சார்பில் ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேவேளையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 உறுப்பினர்களில் 51 பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். திமுக மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு!
‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து… தீர்த்து வைத்த நாட்டாமை சரத்குமார்