திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை.. கனிமொழி சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Kanimozhi Press Meet

திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை “நல்லா போய்க் கொண்டிருக்கிறது” என திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

”கூட்டணி ஆட்சி” விவகாரத்தில் காங்கிரஸ் கோரிக்கையை திமுக நிராகரித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, கனிமொழி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு விவரங்களை விரிவாக நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று ஜனவரி 30-ந் தேதி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”திமுக- காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நல்லா போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்த உடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share