ADVERTISEMENT

திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு! ப.சிதம்பரம் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

DMK Congress Seat Sharing Talks

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ் கட்சி 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.

இந்த குழுவில்

ADVERTISEMENT

1) கிரிஷ் ஜோடங்கர் (தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்)
2) செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்)
3) சூரஜ் ஹெக்டே (காங்கிரஸ் செயலாளர்)
4) நிவேதித் ஆல்வா (காங்கிரஸ் செயலாளர்)
5) ராஜேஷ்குமார் (தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்)

ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

ப.சிதம்பரம் கருத்து

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்

ADVERTISEMENT

‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது

அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share