500 ஏக்கர்.. 10 லட்சம் பேர்.. களைகட்டும் திமுக திருச்சி மாநாடு- நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்

Published On:

| By Mathi

DMK Conference Trichy KN Nehru

திருச்சியில் நாளை மார்ச் 9-ந் தேதி நடைபெறும் திமுகவின் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

  • 500 ஏக்கரில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
  • ‘ஸ்டாலின் தொட­ரட்­டும்- தமிழ்­நாடு வெல்­லட்­டும்’ என்­கிற தலைப்­பில் திருச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • 2021-ம் ஆண்டு மாநாடு நடைபெற்ற அதே இடத்­தி­லேயே தற்­போ­தும் மாநாடு நடை­பெ­று­கி­றது.
  • திறந்­த­வெளி மாநா­டாக நடைபெறுகிறது.
  • தொண்­டர்­கள் அமருவதற்கு 200 ஏக்­கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
  • 25,000 வாக­னங்­கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
  • தொண்­டர்­கள் அம­ரும் பகுதியில் இளஞ்­சி­வப்பு நிறத்­தில் தரை விரிப்­பு­கள் விரிக்­கப்­பட்­டுள்­ளன.
  • திருச்சி மாநாட்டில் 10 லட்­சம் பேர் பங்­கேற்­பார்­கள் என்பது எதிர்பார்ப்பு.
  • மாநாட்டு திடலில் 5 லட்­சம் நாற்­கா­லி­கள் போடப்படும்.
  • அனை­வ­ருக்­கும் கழி­வறை வசதி, குடி­நீர் வசதி உள்­ளிட்ட அனைத்து வித­மான அடிப்­படை வச­தி­கள் செய்யப்பட்டுள்ளன.
  • அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு ஏற்பாடுகளை இரவு பக­லாக பம்­ப­ர­மாக சுழன்று செய்து வருகிறார்.

மாநாட்டு நிகழ்ச்சிகள்

ADVERTISEMENT
  • மாநாட்டின் தொடக்கத்தில் 100 அடி உயர கொடிக்­கம்­பத்­தில் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைக்­கி­றார்.
  • திரைப்­பட இசை­ய­மைப்­பா­ளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக் கச்­சேரி நடைபெறும்.
  • மாலை­யில் மாநாட்­டுத் திட­லுக்கு வரும் முதல்­வர் மு.க.ஸ்டாலின், அரை கி.மீ. நீள ‘ரேம்ப்’­­பில் தொண்­டர்­கள் மத்­தி­யில் நடந்து வரு­கி­றார்.
  • திமுக தலைவர்கள் பேசிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிறைவுரையாற்றுவார்.

அமைச்சர் நேரு சொன்னது என்ன?

  • அமைச்­சர் கே.என்.நேரு மாநாட்­டுப் பணி­களை பார்வையிட்ட பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுகவுக்கு திருப்பு முனை மாநாடாக திருச்சி மாநாடு அமையும்.
    போக்­கு­வ­ரத்து மாற்றங்களை காவல்­து­றை செய்துள்ளனர்.
  • கடந்த தேர்­த­லின் போது இதே இடத்­தில் மக­ளிர் உரி­மைத்­தொகை போன்ற 7 வாக்­கு­று­தி­களை அறி­வித்­தார். அதே­போன்று இந்த மாநாட்­டில் பல்­வேறு புதிய அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்­கின்­றோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share