ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு!

Published On:

| By Minnambalam Login1

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை(ஆகஸ்ட் 15)  நடக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

பொதுவாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் ஆளுநர் அர்.என்.ரவி தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி, திமுகவுடன்  கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ(எம்), காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து திமுக கட்சியும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் அந்தந்த அரசாங்கத்திற்குக் குடைச்சல் கொடுப்பதை பாஜக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலும் , ஆளுநர் ஆர்.என் ரவி காவி உடையில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தைப் பகிர்வது, மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பல கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான்  திமுகவும், நாளை நடக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக கம்பீரின் நண்பர் நியமனம்!

”தலித் முதல்வராக முடியாது” : திருமாவளவன் சொன்னது சரிதான்… ஆனா இது பிடிக்கல… சீமான் பேட்டி!

ஒரே நாளில் எஸ்.பி.எம் தந்த இரண்டு படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share