சட்டமன்றத்தில் திமுக கருப்பு பேட்ச்! ஏன்?

Published On:

| By Aara

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு பேட்ச் அணிந்து  சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது என நேற்று இரவு ஆலோசிக்கப்பட்டது. D MK b alack patch in the Assembly

நேற்று (ஏப்ரல் 2)  நாடாளுமன்றத்தில்  வக்ஃப் சட்ட திருத்தம் சுமார் 12 மணி நேரம் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக என்ற முன்மொழிவோடு  இந்த மசோதாவை கடந்த 2024 இல் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டு குழுவில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்த போதும் பல கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை என அந்த குழுவில் இடம் பெற்றிருந்த திமுக உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்டோர் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்த மசோதாவை  எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பின்னணியில் நேற்று வக்ஃப் மசோதா மக்களவையில் 288 ஆதரவு,  232 எதிர்ப்பு என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் திமுக சார்பில் பங்கேற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்பி, “மதம் பிடித்த ஒன்றிய அரசு” என விமர்சித்தார்.

”தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, ஆர். எஸ்..எஸ். அமைப்பினர் தற்போது வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர்.  ஒன்றிய அரசுக்கு மதம் மட்டுமே பிரச்சனையாக உள்ளது”  என்று இந்த விவாதத்தில் குறிப்பிட்டார் ராசா. DMK black patch in the Assembly

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளில் இன்று திமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் வேலு வீட்டில் இருந்து கருப்பு பேட்சுகள் கொடுத்து அனுப்பப்பட்டன என ஆளுங்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share