வைஃபை ஆன் செய்ததும், “நம்ப வச்சு கழுத்தறுத்த… நெஞ்சுக்குள்ள நஞ்ச வளர்த்த…” பாடலை ஒலிக்கவிட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..
என்ன ப்ரோ.. ரொம்ப வேதனையா இருக்கீங்களா?
நமக்கு என்னங்க ப்ரோ வேதனை, சோதனை எல்லாம்.. அரசியல் கச்சேரிகளில நம்பிக்கை துரோகம்தான் ரொம்ப ஹைலைட் டிபேட்டா ஓடுதே..
திமுக மா.செ.க்கள் கூட்டத்தை மே 14-ந் தேதி ஸ்டாலின் கூட்டி இருந்தாரு.. அதுக்கு பிறகு நேத்து திமுக (DMK) இளைஞரணி கூட்டத்தை கூட்ட சொல்லி இருந்தார் ஸ்டாலின்..

உதயநிதி தலைமையில நடந்த இந்த கூட்டத்துல காங்கிரஸ் மேல செம்ம அட்டாக்..
காங்கிரஸ்-க்கு எதிரான தீர்மானத்தை வாசிக்கும் போது உணர்ச்சிவசப்பட்ட இளைஞரணி தம்பிகள், எழுந்து நின்று ராகுலுக்கு எதிரா கோஷமும் போட்டாங்க..
“அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான்”-ன்னுதான் தீர்மானம் நிறைவேத்துனாங்க..
உதயநிதி ஸ்டாலினும் பேசுறப்ப, “காங்கிரஸ் துரோகம் செஞ்சுருச்சு.. இனிமேல திமுக கூட்டணியில காங்கிரஸை சேர்க்கவே கூடாது”ன்னு காட்டமா பேசினாரு..
இதுக்கு காங்கிரஸ் தலைவர்கள் லைனா வந்து திமுகவுக்கு கண்டனம் தெரிவிச்சுட்டும் இருக்காங்க…
விஜய் அரசுக்கு காங்கிரஸ் மட்டுமில்லை.. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் ஆதரிக்குது.. காங்கிரஸ் மாதிரியே விசிக, முஸ்லிம் லீக் அமைச்சரவையில சேர்ந்திருக்கு.. ஆனா காங்கிரஸை மட்டும் திமுக ஏன் இப்படி டார்கெட் பண்ணி வெளுக்குது? அப்படிங்கிறதுதான் எல்லாருக்கும் வர்ற கேள்வி..
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட கேட்டப்ப, “எலக்ஷனுக்கு முன்னாடியே ஏகப்பட்ட குழப்பம் செஞ்சது காங்கிரஸ்தான்… எலக்ஷனில திமுக ஜெயிச்சுட கூடாது அப்படிங்கிற மாதிரிதான் காங்கிரஸ் நடந்துகிட்டது.. ராகுல் காந்தியும் கூட ஸ்டாலினுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய தேதி கொடுக்காம இழுத்தடிச்சாரு.. கிரவுண்ட்ல காங்கிரஸ் கட்சி பெருசா ஒத்துழைக்கவும் இல்லை..
எலக்ஷன்ல திமுக தோல்வி அடைஞ்சப்ப காங்கிரஸ்தான் முதல்ல விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு லெட்டர் கொடுத்துச்சு.. அதோட காங்கிரஸ் நிற்கலை.. விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர லெட்டர் கொடுங்கன்னு கம்யூனிஸ்ட் கட்சி லீடர்ஸ்., விசிக திருமாகிட்டேயும் கார்கேவை பேச வெச்சவரு ராகுல் காந்திதான்..
டெல்லியில சிபிஐ டி ராஜா, சிபிஎம் பேபிகிட்டேயும் விஜய் கவர்மெண்ட்டுக்கு ஆதரவு லெட்டர்ஸ் கொடுங்கன்னு பேசுனதும் ராகுல் காந்திதான்.. அதே ஜோரில் திருமா, காதர் மொகிதீன்கிட்ட ராகுல் காந்தியும் பேசினாரு..
அதே மாதிரி விஜய் கேபினட்டுல இணையனும்னு திருமாகிட்ட கார்கேதான் அதிகமா வலியுறுத்துனாரு..
கேரளாவுல காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில முஸ்லிம் லீக்குக்கு 5 அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க.. அதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டுல விஜய் அமைச்சரவையில சேருங்கன்னு முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனிடமும் கார்கே பேசினாரு..
இப்ப, விஜய் கவர்மெண்ட்டுக்கு வெளியே இருந்து ஆதரவு தர்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட, இனியும் திமுக கூட்டணியில ஏன் இருக்கனும்? காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மாதிரி நாமளும் வெளியேறிடலாமே..ன்னும் சீரியசா பேசிகிட்டு இருக்காங்க..
இப்படி திமுக கூட்டணி கட்சிகள் எல்லாத்தையும் திமுக கிட்ட இருந்து பிரிக்கிற வேலையை ராகுலும் கார்கே செஞ்சதாலதான் காங்கிரஸ் மேல செம்ம கோபம்..
அதைத்தான் இப்ப தீர்மானமா போட்டும் மீட்டிங்கில் வெளிப்படையா பேசியும் காட்டுகிட்டு இருக்கிறாங்க..”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
