ADVERTISEMENT

மக்களவைத் தேர்தல் இன்று நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 36 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு- விஜய் தவெகவால் யாருக்கு சாதகம்? India Today கருத்து கணிப்பு

Published On:

| By Mathi

Tamil Nadu Survey

மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது India Today கருத்து கணிப்பு.

Mood of Nation என்ற பெயரில் India Today நடத்திய கருத்து கணிப்பில் தமிழ்நாடு தொடர்பான முடிவுகள் விவரம்:

ADVERTISEMENT

2025 பிப்ரவரி மாதம் நடத்திய கருத்து கணிப்பில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் தவெக வாக்குகள், திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்கு சாதகமாகும் சூழல் உள்ளது என்கிறது India Today கருத்து கணிப்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share